Published Date: June 28, 2025
CATEGORY: CONSTITUENCY
பொதுமக்களுக்கு பாதுகாப்பான ஒருங்கிணைந்த சேவைகளை வழங்க ஒற்றை உள்நுழைவு தளம் மூலம் 9 அரசு வலைத்தளங்கள் ஒருங்கிணைக்கபட்டுள்ளதாக தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறியதாவது:
மாநில அரசு துறைகளில் மென்பொருள் பயன்பாட்டை முறைப்படுத்தி ஒருங்கிணைந்த அங்கீகாரத்தை வழங்குவதற்காக தமிழ்நாடு மின் ஆளுமை முகமையின் கீழ் தமிழ்நாடு ஒற்றை உள்நுழைவு தளம் ( சிங்கிள் சைன் - ஆன்)கடந்த 2023 -24 நிதியாண்டில் அறிமுகப்படுத்தப்பட்டது.
இந்த தளமானது பல பயணிகள் தங்களது உள்நுழைவு தரவுகள் இணையதளங்களை பயன்படுத்தும் போது இருக்கும் தடைகளை நீக்கி ஒருங்கிணைந்த பாதுகாப்பான மற்றும் எளிமையான சேவைகளை பொதுமக்களுக்கு வழங்குவதை நோக்கமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது.
இரு கட்டமாக அரசுத்துறைகளுக்கு இடையேயான சேவைகளை வழங்குதல் அரசு துறைகள் பொதுமக்கள் கிடையான சேவைகளை வழங்குதல் ஆகியவற்றில் தொடர்ந்து கவனம் செலுத்தி வரும் தமிழ்நாடு ஒற்றை உள்நுழைவு தளம் மூலம் இதுவரை 9 முக்கிய அரசு துறை வலைத்தளங்கள் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன.
அதன் அடிப்படையில் மின் அலுவலகம், நீதிமன்ற வழக்குகளை கண்காணிக்கும் சிசிஎம்எஸ் தளம், டான் பிஃநெட், நேரடி பணப்பரிமாற்ற இணையதளம் கலைஞர் மகளிர் உதவி திட்டம் மாநில உதவித்தொகை வலைத்தளம் பயிர் கணக்கெடுப்பு வலைதளம், கிரைன்ஸ், தமிழ்நாடு புவியியல் தகவல் அமைப்பு ஆகிய அரசுத்துறை வலைதளங்கள் ஒருங்கிணைக்கப்பட்டு இதன் மூலம் செயல்படுத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
Media: Hindu Tamil